துவாஸ் வெடிப்புச் சம்பவம் எதிரொலி: 500 நிறுவனங்கள் பரிசோதனை…!

(Photo: SCDF/FB)

துவாஸ் வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, சுமார் 500 நிறுவனங்களை மனிதவள அமைச்சகம் சோதனை செய்ய தொடங்கியுள்ளதாக மனிதவள மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது கூறியுள்ளார்.

துவாஸ் தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளது குறித்து கவலை தெரிவித்த அவர், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக ஆராய குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

சடலமாக கிடந்த பெண்.. இயற்கைக்கு மாறான மரணம் – போலீஸ் விசாரணை

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான ஒழுங்குமுறை அல்லது நடவடிக்கைகள் உள்ளிட்ட பரிந்துரைகளையும் அது செய்யும் என்றும் அவர் கூறினார்.

32E துவாஸ் அவென்யூ 11இல் ஏற்பட்ட விபத்து, எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய துகள்கள் வெடிப்பால் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதே வேளையில், டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, சுமார் 510 ஆய்வுகளை அமைச்சகம் நடத்தியுள்ளது. அதில் மொத்தம் 486 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், ஏழு வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது என்று அமைச்சர் ஜாக்கி முகமது தெரிவித்தார்.

இந்த உத்தரவு நேரங்களில், கட்டுமான நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மறுஆய்வு செய்யப்படுகின்றன.

மின் கேபிள்கள் மாற்றும் பணி: ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் 6 ரயில் நிலையங்கள்