தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியரின் உடல்!

Tuas Explosion
(PHOTO: It's Raining Raincoats/Facebook)

துவாஸில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த 3 ஊழியர்களின் உடல்கள் இன்று (மார்ச் 4) சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் (Migrant Workers’ Centre) தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 4 ஊழியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இருந்து உயர் கவனிப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவர் குணமடைந்து திரும்பிவிட்டனர்.

சிங்கப்பூரில் 95% அதிகமான வேலையிடங்களில் பாதுகாப்பு மீறல்கள் கண்டுபிடிப்பு

வெளிநாட்டு ஊழியர் நிலைய குழு, ஊழியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இந்த கடினமான காலகட்டத்தில் அவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தனர்.

காயமடைந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இடையே விரைவில் காணொளி அழைப்புகளை ஏற்பாடு செய்ய மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் MWC தெரிவித்துள்ளது.

திரு மாரிமுத்து, திரு அனிசுஸ்ஸமான் (Anisuzzaman) மற்றும் திரு சொகைல் (Shohel) ஆகியோருக்கான இறுதி சடங்குகள் நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.

திரு மாரிமுத்தின் தம்பியும் சிங்கப்பூரில் பணிபுரிகிறார், அவர் தனது சகோதரரின் உடலை சொந்த பகுதிக்கு எடுத்துச் செல்வார் என்றும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இனி இவர்களுக்கு Work Pass அனுமதி விண்ணப்பிப்பு கட்டாயம்!