உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் – ICAவின் அறிவுறுத்தல் தான் என்ன ?

Heavier traffic expected singapore-malaysia-land-checkpoints

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் ஜூன் மாதத்தின் பிற்பகுதியிலும் தொடருமென, ICA தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த காலகட்டத்தில் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றும் மேலும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, முடிந்தவரை பயணத் திட்டங்களை சரிசெய்யுமாரும் ICA தரப்பில் அறிவுறுத்தப்பட்டுளது.

ஜூன் பள்ளி விடுமுறைகள் தொடங்கியதில் இருந்து போக்குவரத்து நிலைமை “தொடர்ச்சியாக கடுமையாக” உள்ளது என்றும் இது முந்தைய வார இறுதியில் 262,000 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, ஜூன் 10 முதல் 12 வரையிலான சமீபத்திய வார இறுதியில் ஒரு நாளைக்கு 267,000 ஆக அதிகரித்துள்ளது.

இது வெசாக் தினத்தின் வார இறுதி நாட்களில் வந்த பயணிகளின் எண்ணிக்கை (224,000) மற்றும் புனித வெள்ளியில் வந்த பயணிகளின் எண்ணிக்கை 149,000ஐ காட்டிலும் அதிகமாக உள்ளது.

மேலும் immigration clearanceற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு பயணிகளுக்கு ICA அறிவுறுத்தி உள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாகப் புறப்படும் பயணிகள், மலேசியாவின் பங்குனன் சுல்தான் இஸ்கந்தரில் வருகைக்கான சோதனை சாவடி ஜூன் 6 முதல் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் BKE மற்றும் AYE ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ்வே கண்காணிப்பு மற்றும் ஆலோசனை அமைப்பு (EMAS) மூலம் சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலைமையை சரிபார்த்து கொள்ளவும் ICA அறிவுறுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகள், சோதனைச் சாவடிகளின் போக்குவரத்து நிலைமை குறித்த அறிவிப்புகளுக்கு, ICA இன் Facebook மற்றும் Twitter கணக்குகளில் பார்க்கலாம்.