“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

turf-club-closure-workers-affected
Images: Gladys Wee

Singapore Turf Club மூடப்பட போவதை அறிந்த அதன் ஊழியர்கள் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அடைந்ததாக கூறியுள்ளனர்.

மேலும், “வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட போகிறோம்” என்பதை அறிந்த அவர்கள் கண்ணீர் மல்க அதிர்ச்சியில் உறைந்தனர்.

போலி நிறுவன வங்கிக் கணக்குகள்… வேலை தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி – மூவர் கைது

படிப்படியாக வேலை நீக்கம்

சிங்கப்பூர் டர்ஃப் கிளப்பின் ஊழியர்களுக்கு நேற்று (ஜூன் 5) காலை மின்னஞ்சல் வந்தது, சாதாரணமாக அதனை பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், 2027 மார்ச் மாதத்துக்குள் கிளப் மூடப்படுவதாகவும், ஊழியர்கள் படிப்படியாக வேலை நீக்கம் செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டது அவர்களுக்கு இடி விழுந்தது போல இருந்தது.

மேலும் அதில் பணிபுரியும் 350 ஊழியர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கூடுதல் அதிர்ச்சியும் அதில் இடம்பெற்று இருந்தது.

கடந்த மாதம் தான் போனஸ் கொடுத்தாங்க

கடந்த மாதம் தான் ஊழியர்களுக்கு அதிகமாக போனஸ் வழங்கினோம் என்றும், நிறுவனம் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை எட்டியதாகவும் அதன் கார்ப்பரேட் மார்க்கெட்டிங் மூத்த மேலாளர் Ms சங் TODAY செய்தியிடம் கூறினார்.

180 ஆண்டுகளாக நடந்து வந்த குதிரைப் பந்தயம்

“சிங்கப்பூரில் ஏறக்குறைய 180 ஆண்டுகளாக குதிரைப் பந்தயம் நடந்து வந்த நிலையில், இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என திரு தியோ யாம் சூன் என்ற ஊழியர் கூறியுள்ளார்.

62 வயதான திரு தியோ, சுமார் 33 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்தவர். அதாவது அந்த கிளப்பின் மிக நீண்ட காலம் பணியாற்றிய ஊழியர்களில் இவரும் ஒருவர்.

ஏமாற்றமும் வருத்தமும்

அதே போல, இந்த செய்தியை நம்புவதற்கு கடினமாக இருப்பதாக 55 வயதான திரு ஆர் ஜெயராஜு ராஜி என்ற ஊழியர் கூறியுள்ளார்.

திடீரென வந்த இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் ஏமாற்றமும் வருத்தமும் அதிகம் இருந்ததாகவும் திரு ஆர் ஜெயராஜு கூறினார்.

மறுசீரமைப்பு பணி

மறுசீரமைப்பு பணிக்காக Turf Club அமைவு இடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க பட உள்ளது. அதாவது வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அந்த இடம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வேலையில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள் வேறு வேலை தேடிக்கொள்ள போதிய அவகாசம் வழங்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் லிம் உறுதிப்பட கூறியுள்ளார்.

அடுத்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று இறுதியாக குதிரைப் பந்தயம் நடைபெறும் எனவும்,  அதன் பிறகு சுமார் 700 குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“ஊழியர்கள் படிப்படியாக வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்” – Turf club