துருக்கி குண்டு வெடிப்பில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டார்களா? – கண்டனம் தெரிவித்த சிங்கப்பூர் தூதரகம்!

turkey-explosion-no-singaporean-affected; pc-mothership.sg
துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லின் இஸ்திக்லால் தெருவில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“அப்பாவி மக்களின் மரணம் மற்றும் பல காயங்களுக்கு காரணமான” செயலை சிங்கப்பூர் கடுமையாக கண்டிக்கிறது என்று MFA தெரிவித்துள்ளது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் MFA கூறியது.
துருக்கியின் அங்காராவில் சிங்கப்பூர் தூதரகம் உள்ளது.இஸ்தான்புல்லில் உள்ள சிங்கப்பூரர்களை தூதரகம் அணுகியது.அவர்கள் MFA உடன் மின்-பதிவு செய்துள்ளனர்.துருக்கியில் உள்ள சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையாக செயல்படவும்,உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும்,உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

துருக்கிக்கு பயணம் செய்பவர்கள் உடனடியாக MFA உடன் மின்-பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.குண்டு வெடித்ததில் எட்டு பேர் உயிரிழந்திருப்பதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் உள்ள பிரபலமான தக்சிம் சதுக்கத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் வரிசையாக இருக்கும் பிரபலமான பாதையில் இந்த சம்பவம் நடந்தது.
குண்டுவெடிப்பு ஒரு “துரோக தாக்குதல்” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறினார்.மேலும்,குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் பிடிபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.பயங்கரவாதிகளின் செயல் இது என்று கூறிய அவர் பின்னணி யார் என்று கூறவில்லை.
துருக்கியில் தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் பின்வருவனவற்றைத் தொடர்புகொள்ளலாம்;

அங்காராவில் உள்ள சிங்கப்பூர் குடியரசின் தூதரகம் – 90 530 066 7311 (singemb_ank@mfa.sg) , இஸ்தான்புல்லில் உள்ள கெளரவ துணைத் தூதரகம் – 90 212 339 1852(info.singaporeconsul@fibaholding.com.tr ), MFA கடமை அலுவலகம் -65 6379 8800/8855 (mfa_duty_officer@mfa.gov.sg)