சிங்கப்பூரிலும் திறக்கப்பட்ட TVS Apache நிறுவனத்தின் கிளை ! – இந்த வாகனத்திற்கு இத்தனை வெள்ளி கொடுத்தால் வாங்கலாம்!

tvs apache

இந்தியாவின் பிரபல மோட்டார் சைக்கிள் வாகன நிறுவனமான ‘TVS Motor’ நிறுவனம் சிங்கப்பூரில் முதல் மையத்தை நேற்று திறந்துள்ளது.இந்தக் கிளையில் இந்நிறுவனத்தின் உயர்ரக பைக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு அப்பாச்சி ரக மோட்டார்களும் கிளையில் வைக்கப்பட்டுள்ளன.வாகனப் பராமரிப்புச் சேவை,உதிரி பாகங்கள் போன்றவையும் இக்கிளையில் உள்ளன.இக்கிளையில் வாடிக்கையாளர்கள் மிகை மெய்நிகர் தொழில்நுட்ப வசதி மூலம் பரிசோதித்து வாங்கும் வசதியும் உள்ளது.

$9,500 வெள்ளிக்கு ‘TVS Apache RR 310’ ரக வாகனங்கள் விற்பனை செய்யப்படுகிறது. RR 200 ரக வாகனம் $5800 வெள்ளிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களையும் மற்ற வாகன உதிரி பாகங்களையும் உற்பத்தி செய்வதில் அனுபவம் வைத்துள்ளது.சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.