உலகளவில் ஆயிரக்கணக்கான போலி செய்தி கணக்குகளை மூடியது டிவிட்டர்!

Twitter closes thousands of fake news accounts worldwide

தவறான தகவல்களை பரப்புவதாக உலகளவில் ஆயிரக்கணக்கான போலி செய்தி கணக்குகளை மூடியதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை கத்தார் மற்றும் யேமனில் இருந்து நேரடியாக இயக்கப்பட்ட, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வரும் சவுதி சார்பு கணக்குகள் இந்த நடவடிக்கையில் பாதித்ததாக ட்விட்டர் கூறியுள்ளது. அதே போல் சீனாவிலிருந்து சிலர் ஹாங்காங்கில் எதிர்ப்பாளர்களிடையே கருத்து வேறுபாட்டை விதைக்க முயல்கின்றனர் என்றும் ட்விட்டர் கூறியுள்ளது.

கூடுதலாக, ஸ்பெயின் மற்றும் Ecuador நாட்டில் இருந்து இயக்கப்பட்ட போலி கணக்குகள் மூடப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் கூறியுள்ளது.

சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போலியான கணக்குகளை முடக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறது.

மேலும் எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட போலி கணக்குகளை கடந்த மாதம் பேஸ்புக் மேற்கொண்ட இதேபோன்ற நடவடிக்கைகள் மூலம் மூடப்பட்டது.