இருந்த வேலையை இழந்து நிக்குறோம் ! – நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்ததால் வேலையை பறிகொடுத்த உள்ளூர் ஊழியர்கள்

Singapore unemployed helping
(Photo: MOM/FB Page)

உலகின் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்கள் அதன் மனிதவளத்தை குறைத்துக்கொண்டு வருகிறது.ட்விட்டர்,அமேசான்,கூகுள் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன.இதனால் ஊழியர்கள் அவர்களது வேலையை இழந்து தவித்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூரின் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்புச் செய்யப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்தாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து நவம்பர் நடுப்பகுதி வரை சுமார் 1,270 உள்ளூர் ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர்.

விற்பனை,விளம்பரம்,நிறுவனச் செயல்பாடுகள் போன்ற பிரிவுகளில் பணிபுரிந்தவர்களில் 80 சதவீதத்தினர் வேலையை இழந்துள்ளனர்.வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 35 அல்லது அதற்குக் குறைந்த வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Facebookஇன் முதலாளி நிறுவனமான Meta, Shopee ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்துள்ளன.இந்தாண்டின் முதற்பாதியில் மட்டும் 260 உள்ளூர் ஊழியர்கள் ஆட்குறைப்புச் செய்யப்பட்டனர்.