“உரிமம் இல்லாத ஊழியர்கள், பாதுகாப்பற்ற இயந்திரங்கள்…” – வரிசையாக சிக்கும் நிறுவனங்கள் – MOM அதிரடி ஆக்சன்

Two firms ordered to stop work MOM
MOM

சிங்கப்பூரில் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டதையடுத்து இரு நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த உத்தரவு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் டைல் நிறுவனமான சூன் பீ ஹுவாட் டிரேடிங்கிற்கு S$15,000 அபராதமும், மறுசுழற்சி நிறுவனமான DA இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு S$8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

பயணிகளுக்கு இன்பச் செய்தி..! சாங்கி விமான நிலைய முனையம் 2 மீண்டும் திறப்பு

அவைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறியதற்காக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

உரிமம் இல்லாத ஊழியர்கள் கனரக இயந்திரங்களை இயக்கியது, பாதுகாப்பற்ற இயந்திரங்கள், அதிக சுமை ஏற்றப்பட்ட சேமிப்பு அடுக்குகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாதது ஆகியவை அந்த விதிமீறல்களில் அடங்கும் என்று MOM கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வேலையிடங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தே இந்த கடுமையான நடவடிக்கைகளுக்கு காரணம்.

இந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 39 ஊழியர்கள் வேலையிட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

அதிக குழந்தைகள் வேண்டும் என ஆசை… ஆனால் செலவு, மன அழுத்தம் அதிகம் என பின்வாங்கும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு