சட்டவிரோதமாக பணியாற்றிய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அபராதம்!

Two foreign domestic workers fined for working illegally

கடந்த 26 செப்டம்பர் 2019 அன்று, இரண்டு பிலிப்பைன்ஸ் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் (FDW), 39 வயதான ஜெனலின் மசிராக் கண்ணபன் மற்றும் 50 வயதான ஒபிலோ ஆர்லீன் மணாலே ஆகியோருக்கு முறையான ஒர்க் பாஸ் இல்லாமல் பணிபுரிந்ததற்காக ஸ்டேட் நீதிமன்றங்களில் வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் (EFMA) கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இந்த இருவரும், உரிமம் பெற்ற மனிலெண்டெர்ஸ்களிடம் (LMLs) கடன்களைப் பெறவும், அதிலிருந்து லாபம் ஈட்டவும் மற்ற FDWக்களுக்கு உதவி செய்துள்ளனர், இதற்காக ஜெனலின் மற்றும் ஒபிலோவுக்கு முறையே, $8,000 மற்றும் $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டு, மேலும் அவர்கள் சிங்கப்பூரில் நுழைவதற்கும் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஒரு FDW இரண்டாவது வேலையை பெற்றிருந்தால், ஒர்க் பாஸ் இல்லாமல் வேலை செய்வதாக கருதப்படுகிறது. இலாப நோக்கங்களுக்காக அல்லது வேறு எந்த வேலையிலும் அல்லது செயலிலும் ஈடுபடுவதும் இதில் அடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், FDW-களுக்கு $20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கூடுதலாக, அவர்களுடைய பணி அனுமதி ரத்து செய்யப்பட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவர். மேலும், சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்படும்.

EFMA சட்டத்தை மீறும் நபர்கள் அல்லது முதலாளிகளைப் பற்றி அறிந்த பொது உறுப்பினர்கள் இந்த தகவலை MOM வலைத்தளம் (www.mom.gov.sg) வழியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், அல்லது 6438 5122 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியம் காக்கப்படும் என்று MOM தெரிவித்துள்ளது.