புகைப்பித்தல் தொடர்பாக போலிஸ் அதிகாரியை இழிவுபடுத்திய பெண்களுக்கு அபராதம்!

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

துணைப் போலிஸ் அதிகாரியை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய கோ லீ யென் (வயது 50), சீ காம் ஃபா (வயது 49) ஆகிய இரு பெண்களுக்கும் தலா S$3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இப்பெண்கள் புகைப்பிடிப்பதற்காக விதித்துள்ள இடத்தை விட்டு வேறு இடத்தில் புகைப்பிடித்ததைக் கண்டு, ஒரு துணைப் போலிஸ் அதிகாரி இவரிடம் பேசச் சென்றிருக்கிறார்.

பேருந்தில் பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக சீண்டிய ஆடவர் கைது

அதற்கு இருவரும், செல்வந்தர்களிடம் பணிவுடன் பேசுங்கள், நீங்கள் ஒர் ஏழைப் பெண் என துணைப் போலிஸ் அதிகாரியை இழிவுப்படுத்திப் பேசி உள்ளனர்.

பொதுச் சேவை ஊழியரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதர்க்காக இரு பெண்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இருவரும் குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டனர்.

நகை சில்லறை வர்த்தக நிறுவனமான கோல்ட் ஸ்டார் ரிசோர்சஸில் இருவரும் பங்குதாரர்களாகவும், இயக்குநர்களாகவும் இருப்பதாக, கணக்கியல் நிறுவனக் கட்டுபாட்டு ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

2020 செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள லக்கி பிளாஸாவில், துணைப் போலிஸ் அதிகாரியான திருவாட்டி ஆசிகா சுரி கம்சாரி தனது சக ஊழியருடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேசிய சுற்றுப்புற வாரியம் அனுமதித்திருந்தது.

விதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் கோ லீ யென், சீ காம் ஃபா  ஆகிய இருவரும் புகைப்பிடித்துள்ளதை கண்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு அழைப்பாணை வழங்க திருவாட்டி ஆசிகா அவர்களிடம் சென்றுள்ளார்.

அப்போது கோவும், சீயும் திருவாட்டி ஆசிகாவையும், அவர் வாங்கும் சம்பளத்தைப் பற்றியும் இழிவுப்படுத்திப் பேசியுள்ளனர்.

பொதுச் சேவை அதிகாரியை இழிவுப்படுத்தும் குற்றங்கள் நிரூ­பிக்­கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகப்பட்சமாக 1 ஆண்டு சிறை அல்லது S$5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பேருந்தில் பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக சீண்டிய ஆடவர் கைது