சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

Photo: U.S. Ambassador to Singapore Jonathan Kaplan Official Twitter Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை அமெரிக்க நாட்டிற்கான சிங்கப்பூர் தூதர் ஜொனாதன் கப்லான் (US Ambassador Jonathan Kaplan) நேற்று (09/12/2021) நேரில் சந்தித்துப் பேசினார். இதில் இரு நாடுகளிடையேயான விமான பயண போக்குவரத்து, சுற்றுலா, விசா உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

சிங்கப்பூரில் மேலும் 682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இச்சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “புதிய அமெரிக்க தூதர் ஜொனாதன் கப்லானிடமிருந்து இன்று அறிமுக அழைப்பு வந்தது. கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூருக்கான முதல் அமெரிக்கத் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். இப்போது அந்தப் பதவி நிரப்பப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘ரிஸ்க்’ நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது இந்தியா!

சிங்கப்பூரும், அமெரிக்காவும் 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழமான மற்றும் பலதரப்பட்ட உறவைப் பகிர்ந்துக் கொள்கின்றன. நாங்கள் தொடர்ந்து அமெரிக்க இருப்பு மற்றும் பிராந்தியத்தில் ஈடுபாட்டிற்கு நீண்டகால ஆதரவாளராக இருந்து வருகிறோம். தூதர் கப்லானும், நானும் நமது வலுவான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து நல்ல விவாதம் செய்தோம். அவர் எங்கள் உள்ளூர் உணவுகளை ருசிப்பதில் மும்முரமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.