பணி அனுமதியின்றி சிங்கப்பூரில் வேலை செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? – UK குடிமகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை

working without valid work permit
working without valid work permit (PHOTO: WALB)

UK குடிமகனான, Stuart Calum Arthur Alistair என்ற 36 வயதான நபர் பணி அனுமதியின்றி சிங்கப்பூரில் பணி புரிந்ததற்காக அவருக்கு S$6500 அபராதம் விதிக்கப்பட்டது.அவர் நவம்பர் 2015 மற்றும் ஜூலை 2016 ஆகிய மாதங்களுக்கு இடையில் சரியான பணி அனுமதி இல்லாமல் ஃபிரீலான்ஸ் வேலையைச் செய்ததால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட Stuart, உள்ளூர் பத்திரிகையாளரும் ஆர்வலருமான Kirsten Han -ன் கணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் Stuart வெளிநாட்டு மனித வள சட்டத்தின்கீழ் (Foreign Manpower Act) தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன

சிங்கப்பூரின் மனித வள அமைச்சகத்தின் விதிகளின்படி (MOM),மனிதவள அமைச்சகம் வழங்கிய பணி அனுமதி அல்லது அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்ற முடியும் .

Stuart நீண்டகால visit- pass வைத்திருப்பவர் ஆவார். ஆனால் பணி அனுமதிச் சீட்டு இன்றி ஜூன் 2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை சிங்கப்பூரின் செய்தி இணையத்தளமான யாஹூ சிங்கப்பூரில் பிரீலன்ஸ் எழுத்தாளராக பணிபுரிந்தார் என்ற மற்றொரு குற்றச்சாட்டு பரிசீலிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2015 -ல் Refinitiv Asia எனப்படும் தாம்சன் ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்தில் உதவி தயாரிப்பாளராக பணியாற்றத் தொடங்கிய Stuart வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. Refinitiv ஸ்டூவர்ட்டுக்கான பணி அனுமதிக்காக விண்ணப்பித்தது. ஆனால் விண்ணப்பம் செப்டம்பர் 2015 இல் நிராகரிக்கப்பட்டது

பணி அனுமதிக்காக காத்திருக்கும் ஸ்டூவர்ட்டுக்கு மாதத்திற்கு S$4500 சம்பளம் கொடுத்து ஃபிரீலான்ஸ் வேலையை Refinitiv வழங்கியது. பணி அனுமதியின்றி ஸ்டூவர்ட்டை வேலையில் அமர்த்தியதற்காக Refinitiv நிறுவனத்துக்கு S$5500 அபராதம் விதிக்கப்பட்டது. பணி அனுமதியின்றி சிங்கப்பூரில் வேலை செய்ததற்காக அபராதத்தோடு இரண்டு வருட சிறை தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது .