உக்ரைன் விவகாரம்: பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சிங்கப்பூர் வலியுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ரஷ்யாவை வலியறுத்தியுள்ளனர். எனினும், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருவதால், அந்நாட்டு மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களின் சுரங்கப்பாதையில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல், தலைநகர் கீவ்வில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். மற்றொரு புறம் பொருட்களை வாங்குவதற்காக கடைகளிலும் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்களிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது.

இந்திய பயணிகளுக்கான பயண சேவையை அதிகரிக்க உள்ள சிங்கப்பூர்.!

உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டு பயணிகள் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. வான்வெளி போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ள நிலையில், அவர்களை சொந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், உக்ரைன் மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

Work Permit வைத்துள்ளவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோருக்கு சிங்கப்பூர் நுழைய அனுமதி!

இந்த நிலையில், உக்ரைன் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் ரஷ்யாவுக்கு சிங்கப்பூர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறைச் செயலாளர் கூறுகையில், “டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தில் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடங்கும் என்ற ரஷ்யாவின் அறிவிப்பாலும், பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று உக்ரைனில் பல இலக்குகள் மீது தரை மற்றும் வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் குறித்தும், சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

எந்தவொரு காரணத்தாலும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது எந்தவிதமான தூண்டுதலின்றி ஆக்கிரமிப்பு நடத்தப்படுவதை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

கொடூரமாக சண்டையிட்டு கொண்ட இருவர்: வலைத்தளங்களில் வைரலான வீடியோ – நெட்டிசன்கள் அதிருப்தி

ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று நம்புகிறோம்; ஐ.நா. சபை மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவலை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.