‘வாழ்க்கை ஒரு வட்டம்னு’ சொல்றாரோ?; ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவா? – பிரதமர் லீயின் தேசியதினப் பேரணி உரை

ukraine russia india war singapore
ஆகஸ்ட் 21,2022 அன்று நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரையின் போது பிரதமர் லீ ரஷ்யா-உக்ரைன் மோதல் குறித்து பேசினார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைஎடுப்பினைக் கண்டிப்பதன் பின்னணியில் ஒருதலைப்பட்சமாக எடுத்துக்கொள்வது அல்ல என்று மாண்டரின் மொழியில் கூறினார்.
மாறாக அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளித்தல் போன்றவற்றின் மூலம் துணை நிற்பது அனைத்து நாடுகளுக்கும் உள்ள கொள்கைகள் என்று கூறினார்.

 

சில சிங்கப்பூரர்கள், ரஷ்யாவை ஏன் புண்படுத்த வேண்டும் என்று கேட்டனர்.
சிங்கப்பூர் ரஷ்யாவைக் கண்டித்தபோது, ​​பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு ஆதரித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.பிரதமர் லீ, அந்த நாடு அமெரிக்காவுடன் பக்கபலமாகவோ அல்லது ரஷ்யாவுக்கு எதிராகவோ இல்லை என்று கூறினார்.

 

ரஷ்யாவைக் கண்டிக்கும் ஐநா தீர்மானத்தில் இருந்து சீனாவும் இந்தியாவும் விலகியிருப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார்.ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்களை இந்தியா வாங்குவதால் ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணுவதற்கு இந்தியா முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

 

உக்ரைனின் மோசமான நிலையில் அந்நாட்டிற்கு ஆதரவாக சிங்கப்பூர் நிற்கவில்லையெனில்,சிங்கப்பூருக்கு கடுமையான சூழ்நிலை வரும்போது யாரும் துணை நிற்கமாட்டார்கள் என்று பிரதமர் லீ தெரிவித்தார்.