பெரிய மரம் விழுந்த சம்பவம்: விபத்தில் சிக்கிய அந்த 3 பேரின் நிலை என்ன?

Facebook/Christopher de Souza

உலு பாண்டன் சமூக மன்ற வளாகத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று விழுந்ததில் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று நேற்று நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அதில் ஒருவர் வீடு திரும்பினார், மேலும் இருவர் நன்றாக இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

377A பிரிவு ரத்து செய்யப்படுவது என்பது “சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றுகிறோம் என்று அர்த்தமல்ல” – MCI

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உலு பாண்டன் குடியிருப்பாளரான திரு நியோவின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்ததாக, ஹாலந்து-புக்கிட் திமாவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கிறிஸ்டோபர் டி சோசா பேஸ்புக் பதிவில் கூறினார்.

அவர்கள் சீரான உடல்நிலையில் இருப்பதற்காகவும், குணமடைந்து வருவதற்கும் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பதாக திரு டி சோசா கூறினார்.

என்ன நடந்தது?

உலு பாண்டன் சமூக மன்ற வளாகத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று விழுந்ததில் இருவர் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டதாகவும், மற்றொருவர் மரத்தின் அருகில் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) குறிப்பிட்டது.

இந்த சம்பவம் குறித்து, 170 Ghim Moh சாலையில் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக SCDF கூறியது.

சிக்கிய அந்த 2 பேரை காப்பாற்றும் பணியில் மரம் வெட்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

சட்டவிரோத சூதாட்டச் செயல்களில் ஈடுபட்டதாக ஏழு பேரிடம் போலீசார் விசாரணை