உலு பாண்டன் சமூக மன்றத்துக்கு அருகே விழுந்த பெரிய மரம்; அடியில் சிக்கிய இருவர்

உலு பாண்டன் சமூக மன்ற வளாகத்தில் உள்ள பெரிய மரம் ஒன்று விழுந்ததில் 3 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டதாகவும், மற்றொருவர் மரத்தின் அருகில் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 325 பேரிடம் போலீசார் விசாரணை

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகவும், உடல்நிலை சீரான நிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, 170 Ghim Moh சாலையில் நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை 6 மணியளவில் தகவல் கிடைத்ததாக SCDF கூறியது.

சிக்கிய அந்த 2 பேரை காப்பாற்றும் பணியில் மரம் வெட்டும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

அல்ஜுனீட் ஆறாவது மாடி வீட்டில் தீ விபத்து: 13 பேர் வெளியேற்றம்