86 வயதிலும் அசராம உழைக்கும் சிங்கப்பூரின் குடை வியாபாரி – முதியவரின் பதில் அனைவரையும் வியக்க வைத்தது

umbrella seller geylang singapore

சிங்கப்பூரின் Geylang East Central பகுதியிலுள்ள 86 வயதுடைய முதியவர் சிறிய அளவிலான கடையை வைத்து அதில் குடைகளை பழுதுபார்க்கும் வேலையை செய்து வருகிறார். Ng See Tee அவரது கடையில் நீண்ட மற்றும் குட்டையான குடைகளை நேர்த்தியாக தொங்கவிட்டு விற்பனை செய்து வருகிறார். அவர் குடைகளை விற்பனை மட்டும் செய்யவில்லை.
அவரது கடையில் உள்ள அலமாரிகளில் பல்வேறு விதமான குடைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், பழுது பார்க்க தேவையான கருவிகள் போன்றவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதியவர் பெயரளவிலான கட்டணத்தில் குடைகளை பழுதுபார்த்து தருகிறார்.
எப்போதும் உடைந்த குடைகளை பழுது பார்த்து உபயோகப்படுத்த வேண்டும். குடை பழுதடைந்த உடனே புதிய குடைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று முதியவர் பரிந்துரைத்தார்.
Ng நடத்திவரும் வணிகத்தின் பெரும்பகுதி வருமானம் குடைகளை விற்பதில் இருந்து வருகிறது. அவை நல்ல தரம் வாய்ந்தவை மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச பழுதுபார்ப்புடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார். Geylang East-ல் இருபது வருடங்களுக்கும் மேலாக தனது கடையை நடத்தி வரும் முதியவர் இதற்கு முன்பு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடை தயாரிப்பாளரிடம் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதத்தில் திரு Ng-ன் கடை பற்றிய பதிவு முகநூலில் உள்ள Zero Waste குழுவில் 200 முறை பகிரப்பட்டது. இந்த பதிவு பலரிடமிருந்து நேர்மறையான கருத்துக்களை அதிக அளவில் பெற்றது. “குடைகளை பழுது பார்ப்பவர்கள் யாரையும் தெரியாது ,இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது .முதியவரின் சேவை உண்மையில் பாராட்டத்தக்கது ” என்று நெட்டிசன் எழுதினார்

86 வயதான திரு. Ng எவ்வளவு காலம் குடைகளை பழுதுபார்த்து விற்பனை செய்வார்?
“என்னால் இப்போதும் ,இன்னும் வேலை செய்ய முடியும். என்னால் நடக்கவும் சாப்பிடவும் முடியும். அதனால் தொடர்ந்து என் வேலையை என்னால் செய்ய முடியும். நான் என் வேலையை நிறுத்த மாட்டேன் ” என்ற அந்த முதியவர் தன்னம்பிக்கையோடு அளித்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.