கட்டுமானம், கடல் துறைகளில் அதிரடி ஆய்வு… 50 க்கும் மேற்பட்ட வேலை நிறுத்த உத்தரவு

(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பற்ற வேலை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,400 முதல் 3,800 புகார்கள் மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) வந்ததாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

இந்த ஒவ்வொரு புகாரையும் அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், தேவைப்படும்போது வேலையிடங்களை ஆய்வு செய்வதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்ற பதிலில் கூறினார்.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணம்… சாலையில் செல்வோரிடம் தொல்லை – மடக்கி பிடித்த போலீஸ் (Video)

பெறப்பட்ட இந்த புகார்கள் விளைவாக கடந்த ஆண்டில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 84 சதவீதம் அபராதம் மற்றும் வேலை நிறுத்த உத்தரவுகள் போன்ற அமலாக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், கட்டுமானம், கடல் மற்றும் உற்பத்தி போன்ற அதிக ஆபத்துள்ள துறைகளில் 3,500 க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அதிக ஆபத்துள்ள துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கடந்த ஆண்டு இதே காலத்தை விட 35 சதவீதம் அதிகம் ஆகும்.

அதில் சுமார் 9,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு விதி மீறல்கள் தொடர்பாக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் 50 க்கும் மேற்பட்ட வேலை நிறுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. 2021ஆம் ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இந்த உத்தரவு இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஊழியர்கள் வேலையில் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் சொல்லப்பட்டுள்ளது. வேலை நிறுத்த உத்தரவுகள் தற்காலிகமாக தான் இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

வாட்ஸ்அப் மூலம் இந்த வேலையில் ஈடுபட்டால் தண்டனை உறுதி – சிக்கிய 22 பேர்