முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் சிங்கப்பூர் வந்தவுடன் மேற்பார்வை இல்லாமல் தானாகவே ART ரேபிட் டெஸ்ட் சோதனை செய்துகொள்ளலாம்.

VTL ஏற்பாடு மூலம் பயணிப்பவர்கள் அல்லது குறைந்த தொற்று விகிதங்கள் உள்ள இடங்களிலிருந்து வருபவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் அதனை மேற்கொள்ள வேண்டும்.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்

இந்த புதிய நடைமுறை வரும் மார்ச் 15 முதல் நடப்புக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் சிங்கப்பூரில் தங்களுடைய செயல்பாடுகளைத் தொடர்வதற்கு முன்னர், மேற்பார்வை இல்லாமல் எடுக்கப்பட்ட சுயமான ART சோதனை முடிவை sync.gov.sg என்ற இணையம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.

மக்காவோ, சீனா மற்றும் தைவான் ஆகியவை வகை I இன் கீழ் உள்ள நாடுகள்/பகுதிகள், இவை குறைந்த தொற்று எண்ணிக்கையைக் கொண்டவை. VTL ஏற்பாடு இந்தியாவிற்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மார்ச் 11) தெரிவித்தது.

கூடுதலாக, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன், அதாவது 2 நாட்களுக்குள் pre-departure என்னும் பயணத்திற்கு முந்தைய சோதனையை வெளிநாட்டு பயணிகள் மேற்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு