இயந்திரம் வழி பணத்தை டெபாசிட் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – விரக்தி அடைந்த வாடிக்கையாளர்

deposit-not-credited
Google Maps & Daniel Sim/Facebook

சிங்கப்பூரில் கேஷ் டெபாசிட் செய்யும் இயந்திரம் வழியாக பணத்தை செலுத்தியவருக்கு நம்ப முடியாத அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் டெபாசிட் செய்த S$6,000 ரொக்கம் சுமார் 19 மணி நேரம் ஆகியும் அவரது UOB (யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி) கணக்கில் வரவு ஆகாமல் இருந்ததை கண்டு அச்சம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து வங்கியை தொடர்புகொண்டார் அவர், வங்கியின் வாடிக்கையாளர் சேவை ஊழியர்களின் பதிலுக்காக சில நாட்கள் காத்திருக்குமாறு அவருக்கு கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அவ்வாறு கூறியதையடுத்து, விரக்தியடைந்த வாடிக்கையாளர் தனது அனுபவத்தைப் பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் 2 அன்று இரவு 10:37 மணிக்கு UOB இன் புக்கிட் பாத்தோக் மத்திய கிளையின் CDM இயந்திரத்தில் அவர் பணத்தை டெபாசிட் செய்ததாக கூறியுள்ளார்.

அதற்கான ஆதாரமாக அவர் பணம் செலுத்திய ரிசிப்ட் சீட்டையும் பேஸ்புக் பதிவுடன் இணைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரிகள் அவருக்கு முறையாக பதிலளிக்காமல், அவரிடம் கரடுமுரடாக நடந்துகொனதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 3 முதல் 7 வேலை நாட்கள் காத்திருக்குமாறும் அதிகாரிகள் கூறியதை அடுத்து அவர் விரக்தியடைந்தார்.

இறுதியாக மார்ச் 6ம் தேதி காலை வாடிக்கையாளரின் கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டு, அவருக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த பதிவில் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் பலர் வெறுப்பு கருத்துக்களை தெரிவித்து, வங்கியை சாடினர்.