அமெரிக்க செனட்டர்- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

 

கடந்த ஜூன் 15- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் அமெரிக்காவின் செனட் அவையின் உறுப்பினர் மிட் ரோம்னி இடையேயான சந்திப்பு காணொளி மூலம் நடைபெற்றது.

 

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “செனட்டர் மிட் ரோம்னியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் ஒரு நல்ல கலந்துரையாடலை மேற்கொண்டோம். பிராந்திய ஸ்திரத்தன்மையையும், செழிப்பையும் வளர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.

 

பிராந்திய பொருளாதாரக் கட்டமைப்பு உட்பட எங்கள் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அதிக ஈடுபாட்டையும் சிங்கப்பூர் வரவேற்கிறது. செனட்டர் ரோம்னியும் நானும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட இரு தரப்பு உறவுகளின் சிறந்த நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினோம். ரோம்னியும் நானும் விவாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது. நிலைமை அனுமதிக்கும் போது அவரை நேரில் சந்திக்கக் காத்திருக்கிறேன்.” இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.