அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி….சென்னையில் தரையிறங்கிய விமானம்!

Photo: Singapore Airlines Official Facebook Page

அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து 318 பயணிகளுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

வசதி குறைவான இந்திய குடும்பங்களுக்கு உதவி செய்யும் சிங்கப்பூர்

இதையடுத்து, விமானப் பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, இது குறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, விமானம் ஆந்திரா மாநிலம் வழியாக சென்றுக் கொண்டிருந்த போது, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து விமானி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதியும் கோரியிருந்தார்.

விமான நிலைய அதிகாரிகள் அனுமதியைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தை விமானி அவசரமாகத் தரையிறக்கினார். அதன் தொடர்ச்சியாக, அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், விமானத்திற்குள் சென்று அந்த பயணியின் உடல்நிலையைப் பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

“தகாத வேலைகளில் ஈடுபட்டது… தவறான படங்களை வைத்திருந்தது..” – 23 பேரை தூக்கிய போலீஸ்

அதைத் தொடர்ந்து, ஜென்னடிக்கு அவசர கால மருத்துவ விசாவை சென்னை விமான நிலையத்தின் குடியுரிமை அதிகாரிகள் வழங்கியதை அடுத்து, அவர் பயணி ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, விமான நிறுவனத்தின் உயரதிகாரிகள், அமெரிக்க நாட்டு தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு 317 பயணிகளுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.