“நான் படுத்து உறங்கியதில் நீங்கள் படுக்கணுமா..?” சிங்கப்பூரில் $200 டாலர் வரை விலை போகும் தலையணைகள்! இப்படியும் சம்பாதிக்க வழி இருக்கு!

சிங்கப்பூரில் பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான கருவியாக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதில் உச்ச கட்ட ஆச்சர்யமாக சிங்கப்பூரில் செலுத்தும் பிரபலங்கள் பயன்படுத்தும் தலையணைகள் ஒவ்வொன்றும் S$200 வரை ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

நீங்கள் ஏதாவது ஷாப்பிங் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாலும், பிரபலங்களின் கூடுதல் அன்பு தேவைப்பட்டாலும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இப்போது விரும்பிய பிரபலங்கள் படுத்து உறங்கிய தலையணைகளை ஆர்டர் செய்து பெறலாம்.

Sleeping Beauties ஆன்லைன் ஷாப்பிங் சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் இது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு, சிங்கப்பூரில் செல்வாக்கு செலுத்தும் பிரபலங்களின் தலையணையை வாங்கி விற்பனை செய்கிறது.

இணையதளத்தின் தயாரிப்பு பட்டியல் முழுவதும் பார்த்தால், செல்வாக்கு செலுத்துபவர்களால் வடிவமைக்கப்பட்ட தலையணையின் விலைகள் அவர்களுடைய பிரபல தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.

 

தயாரிப்பு விளக்கத்தின்படி, தலையணைகள் 100 சதவீதம் பாலியஸ்டர், 100 சதவீதம் பாலிப்ரொப்பிலீன் மற்றும் 100 சதவீதம் அன்புடன் பயன்படுத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தளத்தில் மூன்று ரிவியூ போடப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் தலையணைகள் “மிகவும் நல்ல வாசனை” என்று குறிப்பிட்டார். மற்றொருவர்  “தனிமை” என்று குறிப்பிட்டார்.  இன்னொருவர் , “என் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள், அதனால் இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.

ரிவியூக்கள் சரிபார்க்கப்பட்ட வாங்குதல்களா அல்லது சுயமாக உருவாக்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லை. தயாரிப்பின் தரக் கட்டுப்பாடு அல்லது தரம் பற்றிய தகவல்களும் குறைவாகவே உள்ளன; எனவே, வாடிக்கையாளர் விருப்பப்படி வாங்க  அறிவுறுத்தப்படுகிறது.

இன்றுவரை, 24 செல்வாக்கு செலுத்துபவர்கள் தலையணைகளை விற்கின்றனர்.