வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வரும் முன் செய்ய வேண்டியவை என்ன? – ICA அப்டேட்

no-visa-free spore india indonesia
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூருக்குள் வரும் முன், வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் தடுப்பூசிச் சான்றிதழை (vaccination certificate) அவர்களின் மின்னணு சுகாதார அறிவிப்பு அட்டையில் (Electronic health declaration card) பதிவேற்றம் செய்ய ஊக்குவிக்கப்படுவதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

யார் யாருக்கு பொருந்தும்?

  • சிங்கப்பூரர்கள்
  • நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள்
  • வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள்

“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்

இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 7), ICA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அந்த அறிவிப்பு அட்டையானது மின்னணு SG வருகை அட்டையின் (SG Arrival Card) ஒரு பகுதியாகும்.

மேலும், சான்றிதழைப் பதிவேற்றினால், அவர்களின் கோவிட்-19 தடுப்பூசி பதிவு தானாகவே HealthHub அல்லது TraceTogether செயலியில் பதிவாகி தோன்றும்.

விரைவான குடிநுழைவு அனுமதி பெறவும், பயணிகள் சிங்கப்பூர் வந்தவுடன் தானியங்கி பாதைகளைப் பயன்படுத்தவும் அது அனுமதிக்கும்.

இது வருகை குடிநுழைவு கவுண்டர்களில் பயணிகளின் அனுமதியை விரைவுபடுத்தும் என்றும் ICA கூறியுள்ளது.

ஏனெனில், ICA அதிகாரிகள் இந்த பயணிகளின் தடுப்பூசி சான்றிதழை கைமுறையாக சரிபார்க்க வேண்டியதில்லை என்றும் ஆணையம் கூறியது.

வெளிநாட்டு டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை தங்கள் வருகைக்கு முன் பதிவேற்றாத பயணிகளுக்கு குடிநுழைவை அதிகாரிகள் கைமுறையாக (Manual counters) சரிபார்ப்பார்கள் என்றும் அது கூறியது.

பயணம் தொடர்பான சந்தேகங்களை கமெண்டில் தெரிவியுங்கள்…

வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த கட்டுமான நிறுவனம்: பண பரிசு, பிரியாணி என அசத்தல்!