தரைவழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் குடியிருப்பாளர்களுக்கு SG நுழைவு அட்டை அவசியமில்லை – குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம்

border tuas woodlands

சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்டகால பாஸ் வைத்திருப்பவர்கள் ,covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் தரைவழி சோதனைச் சாவடிகள் வழியாக நாட்டிற்குள் நுழையும் போது ஆன்லைன் சுகாதார சான்றிதழை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் அல்லது விமானம் மூலமாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் SG நுழைவு அட்டையை கட்டாயமாக நிரப்ப வேண்டும்.Woodlands மற்றும் Tuas சோதனைச் சாவடியில் SG நுழைவு அட்டையை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் புதன்கிழமை காலை அறிவித்தது.

வேலை மற்றும் படிப்பிற்காக தினசரி எல்லையை கடப்பவர்களுக்கு ,தகுதியான பயணிகளுக்கு இந்தத் தள்ளுபடி அதிக பயனளிக்கும் என்று கூறியது. பயணிகள் எல்லையில் நுழைவதற்கு தகுதி பெற கடந்த 7 நாட்களில் தடை செய்யப்பட்ட எந்த நாடு மற்றும் பிராந்தியத்திற்கு பயணம் செய்திருக்கக்கூடாது.

Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்கள் ,அவர்களது தடுப்பூசி நிலையை Trace together அல்லது Health Hub செயலியில் பதிவேற்ற வேண்டும். Covid-19 வைரஸ் தொற்று 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவத்தொடங்கியதிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் SG நுழைவு அட்டை தேவை என்று அறிவிக்கப்பட்டது