முடங்கிய VTL பயண அனுமதி விண்ணப்பத்திற்கான இணையதளம் – மன்னிப்பு கேட்டது ICA

Vaccinated Travel Pass application view

சிங்கப்பூர் SafeTravel இணையதளத்தில் தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தின் (VTL) அனுமதி விண்ணப்பங்கள் தற்போது பயணிகளுக்கு வேலை செய்யவில்லை.

சிங்கப்பூர்-மலேசியா இடையே VTL பயணத்திற்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்

தடுப்பூசி போடப்பட்ட பயண அனுமதிக்கான விண்ணப்ப (Vaccinated Travel Pass -VTP) இணைய போர்டல் மதியம் 1.45 மணி நிலவரப்படி முடங்கியது.

இன்று மதியம் 1.45 மணியளவில் முடங்கிய VTP போர்ட்டல், தற்போது இணையம் முடங்கியதாக என்று ஒரு செய்தியை பயனர்களுக்கு காட்டியது.

அமைப்பு அட்டவணைப் பராமரிப்பில் உள்ளது என்றும், தற்போது கிடைக்காது என்றும், தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும் என்றும் அதில் கூறப்பட்டது.

“கணினியின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க பணியாற்றி வருகிறோம்” என்று ICA செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், “சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் தெருக்களில் கிடக்கும் குப்பைகளை இரண்டு குழந்தைகளுடன் சுத்தம் செய்த பெண்!