வெளிநாட்டு பயணிகளுக்கான VTP அனுமதி விண்ணப்ப போர்டல் – தற்போது சீராக இயங்குகிறது!

(Photo: Google Street View)

மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, விண்ணப்பிக்க குவிந்த பயணிகள் காரணமாக, VTL பயண அனுமதிக்கான (VTP) விண்ணப்ப இணைய போர்டல் சில மணிநேரங்களுக்குத் தற்காலிகமாக நேற்று (நவம்பர் 22) பாதிக்கப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை திட்டத்தின்கீழ் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழைய விரும்பும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கான விண்ணப்பங்கள் நேற்று காலை 10 மணிக்கு SafeTravel இணையதளத்தில் திறக்கப்பட்டது.

VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்

இரு நாட்டு பயணிகளுக்கான VTP விண்ணப்பப் போர்டல் காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டபோது… ஒரே நேரத்தில் விண்ணப்பங்கள் பெற அதிகமான மக்கள் இணையத்தில் குவிந்ததால் போர்டல் முடங்கியது என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) திங்கள்கிழமை மாலை தெரிவித்தது.

VTP போர்டல் திறக்கப்பட்டபோது உள்நுழைய கிட்டத்தட்ட 35,000 பேர் முயற்சித்ததாகவும், அதனால் அது முடங்கியதாகவும் ICA கூறியது.

அதனை அடுத்து, பிற்பகல் 3 மணிக்கு இணையதளம் இயல்பு நிலைக்குத் திரும்பியது, என்றும் அது கூறியது.

இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் மற்றும் புரிந்துகொண்ட விண்ணப்பதாரர்களுக்கு நன்றி என்றும் ICA கேட்டுக்கொண்டது.

தற்போது, VTP விண்ணப்பப் போர்டல் தடங்கல் இன்றி இயங்கி வருகிறது.

முடங்கிய VTL பயண அனுமதி விண்ணப்பத்திற்கான இணையதளம் – மன்னிப்பு கேட்டது ICA