VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்

Google Maps

சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையில் VTL பயண ஏற்பாட்டின்கீழ் சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பயணம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு வரும் நவம்பர் 29 முதல் தொடங்கப்பட உள்ளது.

முடங்கிய VTL பயண அனுமதி விண்ணப்பத்திற்கான இணையதளம் – மன்னிப்பு கேட்டது ICA

ஆனால், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்வதற்காக ஆகும் செலவு கிட்டத்தட்ட மொத்தம் S$500 வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் குறுகிய கால பயணத்தை விரும்பும் பயணிகளுக்கு இந்த செலவுகள் பயணம் மீது நாட்டத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் to கோலாலம்பூர் செல்ல ஏர் ஏசியா நிறுவனத்தின் இருவழி விமான கட்டணம் S$130 ஆகும், இந்த கட்டணத்தை விட சோதனைகளுக்கு ஆகும் செலவு மட்டும் நான்கு மடங்கு அதிகம்.

இந்த கட்டணங்கள் குறுகிய காலம் வருகைதர என்னும் பயணிகளுக்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

கட்டண விவரம்

  • சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன் PCR சோதனை: S$120
  • சென்றவுடன் மலேசியர்கள் அல்லாதவர்களுக்கு PCR சோதனை: RM350 (S$113.80)
  • கோலாலம்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன் PCR சோதனை: RM250 (S$81.30)
  • சிங்கப்பூர் வந்தவுடன் PCR சோதனை: S$160

விழிப்புடன் இருந்தாலும் இப்படியும் நீங்கள் மோசடி செய்யப்படலாம் – இந்திய ஊழியர்கள் உஷார்