‘பாயசம், வடையுடன் வாழை இலையில் சைவ விருந்து’- வயிறார சாப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

'பாயசம், வடையுடன் வாழை இலையில் சைவ விருந்து'- வயிறார சாப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள பிஜிபி ஹாலில் (PGP Hall) இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக் குழு சார்பில், செப்டம்பர் 24- ஆம் தேதி அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்ட புரட்டாசி ஞாயிறு மதிய விருந்து நடைபெற்றது.

“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை”- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழை இலை போடப்பட்டு, மெதுவடை, அப்பளம், பொரியல், வெள்ளை சாதம், சாம்பார், மோர் மற்றும் பாயசத்துடன் விருந்து அளிக்கப்பட்டது. சுமார் 3,000- க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டு வயிறார சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

'பாயசம், வடையுடன் வாழை இலையில் சைவ விருந்து'- வயிறார சாப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்கள்!
Photo: Hindu Endowments Board

சுமார் 100- க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விருந்தில் கலந்து கொண்டு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப் பரிமாறினர். கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமலும் வெளிநாட்டு ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, விருந்தில் உணவருந்திச் சென்றனர்.

“திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை”- டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

விருந்து தொடங்குவதற்கு முன்னதாக, வெங்கடாஜலபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிய விருந்துக்கான ஏற்பாடுகளை இந்து அறக்கட்டளை வாரியமும், புலம்பெயர்ந்த தொழிலாளர் மையமும் இணைந்து செய்திருந்தனர்.