மாண்டாய் அவென்யூவில் கொழுந்து விட்டெரிந்த பைக்… தீக்கிரையாய் போன வாகனம் – மருத்துவமனையில் ஓட்டுநர்

Motorcyclist taken to hospital after vehicle burst into flames along Mandai Avenue
Serene Tiong

மாண்டாய் அவென்யூவில் இன்று திங்கட்கிழமை (ஜனவரி 24) மோட்டார் சைக்கிள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.

இதனை அடுத்து, 52 வயதுடைய ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தன் சொந்த மகன்களையே கொலை செய்த தந்தை – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்

இந்நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர்க் போலீஸ் (SPF) மற்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) இன்று காலை 7.40 மணியளவில் விபத்து குறித்து தகவல்கள் கொடுக்கப்பட்டன.

இது தொடர்பான வீடியோவில், மூன்று வழிச்சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதைக் காணமுடிகிறது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.

இந்த தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்பது விசாரணையில் உள்ளது என்று SCDF தெரிவித்துள்ளது.

எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் அரசு ‘VTL’ ஒப்பந்தம் செய்துள்ளது?- விரிவான தகவல்!