சிங்கப்பூர் வீராங்கனை 18 வயதில் மரணம் – இந்திய வீராங்கனையுடன் விளையாட இருந்தவருக்கு நேர்ந்த சோகம்!

victoria-lee-mma-fighter-dies
One Championship

சிங்கப்பூரை சேர்ந்த “ஒன் சாம்பியன்ஷிப்” (ONE Championship) கலப்பு தற்காப்புக் கலை (MMA) வீரர் விக்டோரியா லீ காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 18.

இது குறித்து அவரின் சகோதரி ஏஞ்சலா லீ இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விக்டோரியா லீ கடந்த டிசம்பர் 26, 2022 அன்று காலமானதாகவும், அவரது மறைவால் குடும்பம் கடுமையான வேதனையை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மெர்லியன் பார்க்கில் உள்ள நீர்ப்பகுதியில் மிதந்த 31 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் – யார் அவர் ?

“அவர் எங்களை விட்டு சீக்கிரம் சென்றுவிட்டார், அன்றிலிருந்து எங்கள் குடும்பம் முற்றிலும் உடைந்துபோய் உள்ளது.”

மேலும், “வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது” என்பதையும் ஏஞ்சலா லீ இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தயவுசெய்து, உங்கள் அன்புக்குரியவர்களை பேணிகாத்து அன்பு செலுத்துங்கள்” என்றும் கண்ணீர் மல்க அவர் குறிப்பிட்டார்.

இந்திய வீராங்கனை Zeba Bano வுடன் அவர் வெறும் ஜன.13 ஆம் தேதி போட்டியிட இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் TOTO ஜாக்பாட் குலுக்கலில் S$1 டிக்கெட் வாங்கி S$5.5 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற அதிஷ்டசாலி!