தெருவில் விளையாடிய 3 வயது சிறுமியை தூக்கிச்செல்லும் காட்டு குரங்கு – பகீர் கிளப்பும் வீடியோ!

ஸ்கேட்-ஸ்கூட்டரில் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை குரங்கு இழுத்துச் சென்றது. குழந்தையின்  தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற கொடூரமான காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.

ஏப்ரல் 19 அன்று நடந்த இந்த சம்பவத்தில், காட்டு குரங்கு குழந்தை மீது பாய்வதை வீடியோ காட்டுகிறது.

அமைதியான தெருவில் ஸ்கேட் ஸ்கூட்டரில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் அருகில் நெருங்கும் குரங்கு, இழுத்துச்சென்று, ஒரு சந்துக்குள் நுழைகிறது.

அதிர்ஷ்டவசமாக இதனை கவனித்த ஒருவர் விரைவாக செயலில் இறங்கினார். குரங்கு குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் முன் அதன் பிடியில் இருந்து காப்பாற்றினார்.

சிறுமியின் தாய் உள்ளே சமைத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று வயது சிறுமியின் முகத்தில் குரங்கால் கீறப்பட் காயம், தலையில் ஒரு தழும்பு இருந்தது. சிகிச்சை மற்றும் தடுப்பூசிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தாய் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் இந்த குரங்கு உள்ளூர் கிராம மக்களை பலமுறை தாக்கியது தெரியவந்தது. குரங்கு அருகில் உள்ள மலைகளில் இருந்து வந்ததாகவும், அதை பிடிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வந்து கிராம மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

குரங்கு பிடிபட்டவுடன், குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க, வன விலங்கு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டு குரங்குகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்கள் என்றும், அவை மீண்டும் மனிதர்களைத் தாக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உள்ளூர் வனத்துறை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.