இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூர் ! – நாட்டை விட்டு தப்பிக்க முயற்சியா? படகு மூழ்கியதா?

Singapore-Sea photo- mothership
சிங்கப்பூர் அதிகாரிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அருகில் கடலில் மூழ்கத் தொடங்கிய படகில் இருந்து சுமார் 300 புலம்பெயர்ந்தோரை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.படகு ஆபத்தில் இருப்பதை உணர்ந்தவுடன் உதவியை நாடிய போது படகு இருந்த சரியான இடம் மற்றும் மற்ற பயணிகளின் அடையாளங்கள் வெளியாகவில்லை.
பயணிகளை அபாயத்திலிருந்து மீட்கக் கோரி படகில் இருந்த இலங்கைப் பிரஜை உதவியை நாடியதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.நவம்பர் 7, 2022 , திங்கட்கிழமை அன்று இலங்கையைச் சேர்ந்த அந்தப் பயணி தனது நாட்டுக் கடற்படையைத் தொடர்புகொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக பயணிகளை படகிலிருந்து பாதுகாப்பாக மீட்க இலங்கை கடற்படையானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியது.சிங்கப்பூரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற சிங்கப்பூர் கப்பற்படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படகில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டது.
மீட்கப்பட்ட பயணிகள் வியட்நாம் நோக்கிச் சென்றதாக இலங்கைக்கு அறிவித்தது.கப்பலில் இலங்கை பிரஜை ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியும் என்று கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
மற்ற பயணிகள் வியட்னாமைச் சென்றடைந்த பிறகு அவர்களின் அடையாளம் சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் அபாயகரமான மற்றும் சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து தப்பிக்க சில இலங்கையர்கள் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.