தலையில் வழிந்த ரத்தத்தை கட்டுப்படுத்த முயன்ற நண்பர்கள் – சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபர்

Singapore Police Force

சிங்கப்பூரின் Lorong 18 Geylang பகுதியிலுள்ள காபி ஷாப்பில் 45 வயதுடைய நபர், ஒரு மாணவரை தலையில் வெட்டியதற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் ஜூன் 1-ம் தேதி அன்று 21 வயதுடைய மாணவரை வெட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்கப்பட்ட மாணவர் தனது நண்பர்களுடன் காபி ஷாப்புக்கு சென்றுகொண்டிருந்தார்.

தனது நண்பர்களை எதிர்நோக்கும் வகையில் உள்ளே அமர்ந்திருந்த மாணவரை 45 வயதான நபர் கத்தியால் தாக்கினார். இளைஞனின் தலையில் வெட்டிய பெரியவர் சத்தமில்லாமல் பின் சந்து வழியாக ஓட்டம் பிடித்தார்.

தாக்கப்பட்ட மாணவர் தன்னை தற்காத்துக் கொள்ள தனது இரண்டு கைகளால் தலையை மறைக்க முயன்றபோது அவரது கை கட்டை விரலுக்கு அருகில் கத்தியால் காயம் ஏற்பட்டதாகவும் ,மொத்தம் ஆறு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தலையில் 2 முறை கழுத்தில் மூன்று முறை என மொத்தம் ஐந்து முறை கத்தியால் வெட்ட பெரியவர் முயற்சித்துள்ளார். கத்தி பலத்த காயத்தை ஏற்படுத்தியதால் மாணவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவரது நண்பர்கள் காயங்களை அழுத்துவதன் மூலம் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

அதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தப்பி ஓடிய ஆடவர் ஹௌகாங் அவென்யூ 5 இல் உள்ள வீட்டில் பிடிபட்டார், அதாவது சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார்.