விசா இல்லாமல் இலவசமாக பயணிக்க வாய்ப்பு: பட்டியலில் சிங்கப்பூர் உள்ளிட்ட இரு நாடுகள்

சாங்கி விமான நிலையத்தில் நடப்புக்கு வந்த புதிய சோதனை.. பிடிபட்ட பயணிகள் பலருக்கு அபராதம்

விசா அனுமதி தேவையின்றி 15 நாள் வரை சிங்கப்பூரில் இருந்து சீனாவுக்கு பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த அனுமதி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீனா அந்த அனுமதியை மீண்டும் வழங்கியுள்ளது.

அதாவது வரும் புதன்கிழமை (ஜூலை 26) முதல் விசா அனுமதி தேவையின்றி 15 நாள் வரை சிங்கப்பூரர்கள் பயணிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

அதே போல புருனே குடிமக்களுக்கும் இந்த ஏற்பாடு மீண்டும் தொடங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் சிங்கப்பூர் மற்றும் புருனே நாட்டு குடிமக்கள் வர்த்தக ரீதியாகவும், சுற்றிப் பார்க்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்க்கவும் சீனாவிற்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

இதனை வரவேற்கிறோம் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தனது Facebook பக்கத்தில் கூறியுள்ளது.