அரசுமுறைப் பயணமாக லண்டன் செல்கிறார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

 

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், இங்கிலாந்து நாட்டின் லண்டனுக்கு இன்று (ஏப்.04) செல்லவுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்…. மனோபாலாவின் திரைப்பயணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்து அரசாங்கம் விடுத்த அழைப்பின் பேரில், மே 4- ஆம் தேதி முதல் மே 7- ஆம் தேதி வரை லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, மே 6- ஆம் தேதி அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெறும் முடிச்சூட்டு விழாவில், இங்கிலாந்து நாட்டின் 40-வது மன்னராக மூன்றாம் சார்லஸ் (Charles III) முடிச்சூடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதேபோல், இங்கிலாந்து நாட்டின் அரசியாக கமிலா (Camilla) பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்ளும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், வியட்நாம் அதிபர் வோ வான் வோங் (President of the Socialist Republic of Vietnam Vo Van Thuong) மற்றும் ஃபிஜி அதிபர் ரது வில்லியம் கட்டோனிவேர் (President of the Republic of Fiji Ratu Wiliame Katonivere) ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார்.

மே 5- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பூஜை!

பிரிட்டனில் வாழும் சிங்கப்பூரர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும், அவர் பங்கேற்கவிருக்கிறார். அதிபர் ஹலிமா யாக்கோப் இல்லாத நேரத்தில், அதிபர் ஆலோசகர்கள் குழுவின் தலைவர் எடி தியோ (Eddie Teo), அதிபர் அலுவலகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பார்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.