இந்தியா-சிங்கப்பூர் விமான சேவை: Omicron அச்சத்தின் மத்தியில் விமானங்களை இயக்கத் தொடங்கிய “விஸ்தாரா”

புதிய ‘Omicron’ தொற்று அச்சத்தின் மத்தியில், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண திட்டத்தின் (VTL) கீழ் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று திங்கள்கிழமை தொடங்கியது.

புதிய தொற்று அச்சத்தின் காரணமாக சிங்கப்பூர் சில நாடுகளுடன் இதேபோன்ற பயண ஏற்பாடுகளை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருந்து சிட்னி சென்ற இரண்டு பயணிகளுக்கு புதிய Omicron COVID-19 வகை உறுதி

இந்தியாவில் இருந்து விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவை சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால், ஏர் இந்தியாவிடம் இருந்து எந்த கருத்தும் இல்லை. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்கு தனிமைப்படுத்தல் இல்லா பயணத்தை VTL மூலம் மேற்கொள்ள முடியும்.

சிங்கப்பூருக்கான சேவைகளின் இப்போது எந்த மாற்றமும் இல்லை என்றும், முதல் விமானம் நேற்று அதிகாலை 1:50 மணிக்கு சென்றது என்றும் விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போது எந்த மாற்றமும் இல்லை என்றாலும், நிலைமையை மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும் என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

‘Non-VTL’ விமான சேவையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!