சிங்கப்பூருக்கு விமானச் சேவையை தொடங்கியது விஸ்டாரா விமான நிறுவனம்!

Vistara Inaugural Flight to Singapore

சிங்கப்பூருக்கு விமானச் சேவையை தொடங்கியது இந்திய விஸ்டாரா விமான நிறுவனம். இந்தியாவிலிருந்து தினந்தோறும் இரண்டு விமானச் சேவைகளை தொடங்கியுள்ளது.

இந்திய தலைநகர் புதுடில்லி மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான சேவைகள் இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது. மேலும், கூடுதலாக மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை நாளையிலிருந்து ( ஆகஸ்ட் 8) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் – புதுடில்லி இருவழி விமானச் சேவைக் கட்டணம், 451 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது. சிங்கப்பூர்-மும்பை இருவழி விமானச் சேவைக்கான கட்டணம், 522 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.

Boeing 737-800NG ரகத்தைச் சேர்ந்த விஸ்டாராவின் விமானங்கள் Business மற்றும் Ecocnomy வகுப்புப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மேலும், கூடுதலாக மும்பை, புதுடில்லியிலிருந்து சண்டிகர், ஜம்மு, லக்னோ, ராஞ்சி, ராய்ப்பூர், ஸ்ரீநகர், வாரணாசி போன்ற நகரங்களுக்கு இணைப்புச் சேவைகளையும் விஸ்ட்டாரா நிறுவனம் வழங்கி வருகிறது.