சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் Johor முதல்வர் Ghazi – வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அழைப்பு

Johor's new chief minister Onn Hafiz Ghazi. (Photo: Instagram/onnhafiz)

மலேசியாவின் Johor மாநிலத்தின் 19ஆவது முதல்வரான Onn Hafiz Ghazi (April 17) ஞாயிற்றுக்கிழமை முதல் (April 19) செவ்வாய்க்கிழமை வரை சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

Johor மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக பதவியேற்ற திரு. Onn, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனால் அழைக்கப்பட்டார். சுற்றுப்பயணத்தின்போது சிங்கப்பூர் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வரின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது Johor Bahru – Singapore விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) Link Woodlands North பகுதியை பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரின் சர்வதேச நீர் வாரம் 2022 தொடர்பான உச்சிமாநாட்டில் முதல்வர் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி திறன் வளர்ச்சி குறித்து சிங்கப்பூர் நிறுவனங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

Johor முதல்வர், சிங்கப்பூர் பிரதமர் Lee மற்றும் டாக்டர் பாலகிருஷ்ணனை சந்தித்து வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் Gan Kim Yong, போக்குவரத்து அமைச்சர் Iswaran மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu ஆகியோரை சந்தித்து பேசுவார்.

முதலமைச்சரின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் ,Johor மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.