நார்வே வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

Photo: Ministry of Foreign Affairs, Singapore

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிப்ரவரி 20, 21, 22 ஆகிய நாட்களில் நார்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

சட்டத்திற்கு புறம்பான சுமார் S$700,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் – 3 பேர் கைது

சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக, நார்வே நாட்டிற்கு சென்ற சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், தலைநகர் ஒஸ்லோவில் (Oslo) அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னிகன் ஹுட்ஃபெல்ட்டை (Norwegian Minister for Foreign Affairs Anniken Huitfeldt) நேற்று (21/02/2022) காலை நேரில் சந்தித்துப் பேசினார். அவர்கள் சிறந்த இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தினர். சிங்கப்பூர் மற்றும் நார்வே இடையே ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு மற்றும் கல்வி பரிமாற்றங்களில் மேலும் ஒத்துழைப்பை வரவேற்றனர். உக்ரைன் மற்றும் மியான்மர் நிலவரங்கள் உட்பட, உலக மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் குறித்தும் இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மாநிலச் செயலர் ஹல்வர்ட் இங்க்ப்ரிக்ட்சன் (Ministry of Trade & Industry State Secretary Halvard Ingebrigtsen) மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் மாநிலச் செயலர் ஈவிண்ட் வாட் பீட்டர்சன் (Ministry of Foreign Affairs State Secretary Eivind Vad Petersson) ஆகியோர் மதிய உணவு விருந்தளித்தனர். மதிய உணவில், அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கடல், தொலைத்தொடர்பு மற்றும் கப்பல் துறையைச் சேர்ந்த நார்வே நாட்டு வணிகத் தலைவர்களை சந்தித்தார். அப்போது, சிங்கப்பூர் மற்றும் நார்வே இடையே மேலும் வணிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் வியட்நாம் அதிபர்!

அதைத் தொடர்ந்து, இந்தோ-பசிபிக் ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் மாநாட்டில் (Ministerial Forum on Cooperation in the Indo-Pacific) கலந்து கொள்வதற்காக அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று (21/02/2022) ஒஸ்லோவில் இருந்து பாரிஸ் செல்கிறார்.