எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!-நீரில் மிதக்கும் சூரிய மின் தகடு தொழில்நுட்பம் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம்

Australian solar farm could provide 20% of S’pore’s electricity in future via undersea cables

சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய மின் தகடுகளை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.எரிசக்தியையே பெரிதும் சார்ந்துள்ள சிங்கப்பூரின் நீர் நிர்வாகம் ,நீருக்கான தேவையையும்,நீர்ச் சூழலையும் ஆதரிக்க பசுமை எரிசக்தி மிகவும் அவசியம்.

நீரை மறுசுழற்சி செய்யவும்,குறைந்த செலவில் அதிக தண்ணீரை உற்பத்தி செய்யவும் கடந்த 15 ஆண்டுகளாக நுண்வடிகட்டி முறை பயன்பட்டு வந்தது.ஆனால் அது சிங்கப்பூரின் எரிசக்தியை சார்ந்துள்ளது என்றார்.போர்ச்சுக்கீசிய தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற ஐநா பெருங்கடல் ஆதரவு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் விவியன் சனிக்கிழமை வரை அங்கிருப்பார்.தண்ணீர் தொடர்பாக நடைபெற்ற வட்ட மேசை கூட்டத்தில் இணைத் தலைமை ஏற்று பேசினார்.

தற்போது சிங்கப்பூரில் 1000 லிட்டர் கடல் நீரைக் குடிநீராக மாற்ற,கனமீட்டருக்கு 3.5 கிலோவாட் என்ற அளவில் மின்சாரம் செலவிடப்படுகிறது.மின்சாரச் செலவை 2 கிலோவாட்டாக குறைப்பதற்கு சிங்கப்பூர் பணியாற்றி வருகிறது என்று கூறினார்.60 மெகா வாட் மின்சாரம் தாயரிக்கும் வல்லமை பெற்ற Tengah நீர்த்தேக்கத்தில் அமைக்கப் பட்டுள்ள மிதக்கும் சூரிய மின் தகடுகளைச் சுட்டிக் காட்டினார்.

பசுமை நீர்வளத்தை நூறு சதவீதம் கொண்டிருக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று கூறினார்.சிங்கப்பூரில் 200-க்கும் மேற்பட்ட நீர் நிர்வாக நிறுவனங்களும் 25 நீர் ஆய்வு மையங்களும் உள்ளன.நீர்வளத் தேவைக்கான எரிசக்தி முழுவதையும் உற்பத்தி செய்யும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் மீள்திறன் தாக்கங்களையும் கவனிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

 

” சிங்கப்பூரில் ஒரே அமைச்சகத்தின் கீழ் நீர் நிர்வாகம் செய்வதற்கான அனைத்தையும் செயல்படுத்துவதற்கான அணுகுமுறை உள்ளது.எனவே,நீர் விநியோகம் தொடங்கி பயன்படுத்தப்பட்ட தண்ணீர் மீட்பு,வெள்ளம்,வடிகால், கடலோரப் பாதுகாப்பு போன்றவ்ற்றிலிருந்து ஒவ்வொரு துளி நீரையும் பெற்று ,உபயோகித்து மறுபயனீடு செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது” என்று அமைச்சர் விவியன் விளக்கினார்