அரசுமுறை பயணமாக ஜகார்த்தாவுக்கு செல்லும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

 

 

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தோனேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சிலேத்தர் விரைவுச்சாலையில் விபத்து.. சாலையில் கவிழ்ந்த வேன்

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வரும் ஜூலை 11- ஆம் தேதி முதல் ஜூலை 14- ஆம் தேதி வரை இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள 56- வது ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் (56th ASEAN Foreign Ministers’ Meeting- ‘AMM’), பிந்தைய அமைச்சர் மாநாடு (Post Ministerial Conferences- ‘PMCs’), 24வது ஆசியான் பிளஸ் த்ரீ வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் (24th ASEAN Plus Three Foreign Ministers’ Meeting- ‘FMM’), 13வது கிழக்கு ஆசியா கூட்டம் ( 13th East Asia Summit- ‘EAS’), 30வது ஆசியான் பிராந்திய மன்றம் (30th ASEAN Regional Forum- ‘ARF’) ஆகிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜூலை 11- ஆம் தேதி அன்று இந்தோனேசியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆசியான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், ஆசியான் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது, நோய்த்தொற்று பிந்தைய பொருளாதாரம், வர்த்தகம், இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுச்சூழல் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தின் பார்வையாளராக முதன்முறையாக பங்கேற்கிறது திமோர்- லெஸ்டே நாடு (Timor-Leste).

வெளிநாட்டு ஊழியரை மோதி தூக்கிவீசிய லாரி… சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட சோகம் (வீடியோ)

ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். அவர்களை தனித்தனியாக சந்திக்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.