பிரதமர் லீயுடன் விவியன் பாலகிருஷ்ணன்! – கம்போடியாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பயணம்;அதுவரை பிரதமர் பதவியில் இவர்!

லீ; pc-minstry of information

ASEAN உச்சி மாநாடு கம்போடியாவில் நடைபெற உள்ளது.சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் மாநாட்டில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று முதல் மூன்று நாட்களுக்கு கம்போடியாவில் பிரதமர் தங்கியிருப்பார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் இதர அதிகாரிகளும் மாநாட்டில் பிரதமருடன் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

பிரதமர் அதிகாரப்பூர்வ பயணத்தின் காரணமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருப்பதால் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு. லாரன்ஸ் வோங் (Lawrence Wong) தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.

நாளை தொடங்கும் ஆசியான் உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும்.aஆசியானின் தலைமைத்துவப் பொறுப்பு சுழற்சிமுறையில் மாறிக்கொண்டே இருக்கும்.அந்த வகையில் கம்போடியா தலைமைத்துவப் பொறுப்பில் உள்ளது.

இந்தச் சந்திப்புக் கூட்டம் “சவால்களை ஒன்றாகச் சமாளிப்போம்” என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. ஆசியான் தலைவர்களிடையே COVID-19 பாதிப்புகளிலிருந்து மீண்டுவரும் வேளையில் இவ்வட்டாரத்தில் அமைதி, செழிப்பு, நிலைத்தன்மையை மேம்படுத்த கூட்டு முயற்சியின் உணர்வை எவ்வாறு தொடர்ந்து நிலைநிறுத்தலாம் என்பதுபற்றி ஆலோசனை நடைபெறும்.

அனைத்துலக முன்னேற்றங்கள் குறித்த கருத்துகளையும் தலைவர்கள் பரிமாறிக்கொள்வார்கள்.