முதன் முறையாக சிங்கப்பூரின் பறக்கும் ஏர் டாக்ஸி சேவைக்கான சோதனை வெற்றிகரமாக முடிந்தது..!!

Volocopter air taxi's test flight at Marina Bay ( Photo : SG News Yahoo )

Volocopter ஏர் டாக்சி மரினா பே வட்டாரத்தின் வழியாக தனது முதல் சோதனை நடவடிக்கையாக இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) நண்பகலில் இயக்கப்பட்டது.

பிரிட்டிஷ் நிறுவனமான Skyports, ஜெர்மானிய நிறுவனமான Volocopter ஆகியவை இணைந்து புதிய Voloport திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.

இந்த ஏர் டாக்ஸியால் சுமார் 450 கிலோ கிராம் எடை வரை தூக்கிச் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு நபர்கள் வரை அதில் பயணம் செய்யலாம், மேலும் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த டாக்சிகளால் பறந்து செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.

Volocopter air taxi flies over Marina Bay, Singapore

WATCH: Volocopter's flying air taxi makes a brief manned flight over Singapore's Marina Bay.(Video: Marcus Mark Ramos & Try Sutrisno Foo)

Posted by CNA on Tuesday, October 22, 2019

இந்த ஏர் டாக்ஸி சேவையை சிங்கப்பூரில் 2021 ஆம் ஆண்டிற்கு முன்பே கிடைக்கச் செய்வதற்கான திட்டங்கள் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.