வானத்தில் பறக்கும் டாக்ஸி – இனி சிங்கப்பூரில் காற்று வழிப் போக்குவரத்துதான்!

volocopter volocity singapore transport service german tech

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது.நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க Air Mobility தொழில்நுட்பத்தை உருவாக்கி வரும் ஜெர்மன் நிறுவனமான Volocopter ,ஆசியாவிலேயே முதன்முறையாக கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

Volocity-இன் ஏர் டாக்ஸி சேவைகள் பயணிகள்,சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் ஆகிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

வணிகப் பயணிகளுக்காக, சிங்கப்பூரின் மெரினா தெற்கிலிருந்து ஜோகூர் பாருவில் உள்ள இப்ராஹிம் இன்டர்நேஷனல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் அல்லது படாமில் உள்ள நோங்சா டிஜிட்டல் பார்க் போன்ற பொருளாதார மையங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.

Volocopter நன்கு நிறுவப்பட்ட பின்னர்,மலிவான கட்டணத்தில் அனைத்து பயணிகளையும் ஏற்றிச் செல்லும் புதிய பயண அமைப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவையை எளிதாக்குவதற்கு நான்கு முதல் ஆறு வோலோபோர்ட்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். மெரினா சவுத், சென்டோசா மற்றும் சாங்கி பகுதியில் ஏவுதளங்கள் நிறுவப்படும்.

நகர்ப்புற ஏர்மொபிலிட்டி சேவைகள், சிங்கப்பூரில் 2030-ஆம் ஆண்டிற்குள் 1,300 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இது மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால்,மாசுபாட்டை தவிர்த்து நிலையான போக்குவரத்தை வழங்குகிறது.விமானங்கள் அல்லது ஹெலிகோப்டேர்களுடன் ஒப்பிடும்போது,இது அமைதியானது என்பது இதன் சிறப்பம்சமாகும்.