கிருமித்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்… தொடர்ந்து ஆதரவளிக்கும் தொண்டூழிய குழுக்கள்

(Photo: Mothership)

கொவிட்-19 பரவல் மக்களை பெருமளவு பாதித்தது. அனைவரின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்குள்ளாகியது. குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து வந்து சிங்கப்பூரில் கடை நிலை வேலைகளில் புரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரமும் பெரும் அளவு பாதிப்பிற்குள்ளாகியது.

பொது முடக்கம் போன்ற கட்டுப்பாடுகளால் அவர்கள் அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டது.

அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தொண்டூழிய குழுக்கள் உதவிகள் மேற்கொண்டனர். அன்று முதல் இன்று வரை அவர்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது.

சிங்கப்பூர் சமூகத்துடன் வெளிநாட்டு ஊழியர்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக வெல்கம் இன் மை பேக்யார்ட (விம்பி), கொவிட்-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணி (சிஎம்எஸ்சி) போன்ற தொண்டூழிய அமைப்புகள் தெரிவித்தன.

முதலாமாண்டு நிறைவை ஒட்டி, ஜூலை 4ஆம் தேதி ஆறு பேக்கரிகளில் இருந்து உணவுப்பொருட்கள் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள விடுதிக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

பேக்கரி உரிமையாளர்களில் ஒருவர், தொழிலாளர்களுக்கு திருப்பித் தர முடிந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், அவர்களில் பலர் எங்கள் குடியிருப்புகளைக் கட்டுவது போன்ற மிகவும் கடினமான வேலையைச் செய்கிறார்கள் என்று திருமதி டாங் ஹுய் லிங் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் உணவுகளை சுவைக்கவும், நெருக்கடியால் பாதிப்பிற்குள்ளாகியுள்ள உணவுக்கடைகளுக்கு உதவவும் வீ ஈட் என்னும் திட்டத்தை ஷபீர் மியூசிக் ஆசியா குழுவுடன் சேர்ந்து சிஎம்எஸ்சி குழு ஏற்பாடு செய்துள்ளது.