சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

சிங்கப்பூர் வர விரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த ஏப்ரல் 1 ஒரு சிறப்பான நாளாக இருக்கும்.

ஏனெனில், இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கோவிட்-19 தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள், பயணத்திற்கு முந்தைய (Pre-departure) கோவிட்-19 சோதனை சான்றிதழ் மட்டும் வைத்துக்கொண்டு சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

சிங்கப்பூரில் பணிபுரியும் “இந்திய பாஸ்போர்ட்” வைத்திருப்பவர்களுக்கு சுற்றுலா விசா சேவையை தொடங்கியது மலேசியா!

என்னென்ன மாற்றங்கள்

12 வயது மற்றும் அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகளும் Pre-departure சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் வரலாம்.

தனிமை இல்லா பயணத்தை அனுபவிக்க பயணிகள் நியமிக்கப்பட்ட விமானங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டியதில்லை.

பயணிகள் சிங்கப்பூர் வந்த 24 மணி நேரத்திற்குள் கட்டாயம் எடுக்கும் கோவிட்-19 ART விரைவு சோதனையை இனி எடுக்க வேண்டியதில்லை.

பயணிகளுக்கு வரம்பு (quotas) ஒதுக்கீடு இனி இருக்காது, தினசரி பயணிகளின் அளவில் நிர்ணயம் இருக்காது.

முக்கியமாக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதிகள் தேவை இருக்காது.

தற்போதுள்ள VTL திட்டத்துக்கு மாற்றாக, “Vaccinated Travel Framework” எனப் பெயரிடப்பட்ட புதிய பயணத் திட்டம் வரும்.

இரண்டு நாட்களுக்கு முன் எடுக்கப்படும் Pre-departure சோதனை முறை நடப்பில் இருக்கும்.

“சிங்கப்பூர்-மலேசியா” நில எல்லைகள் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறந்தாச்சு: பயணிகள் பெரும் மகிழ்ச்சி!