சிங்கப்பூரில் இருந்து துபாய், ஹாங்காங், மணிலா உள்ளிட்ட நகரங்களுக்கு ‘VTL’ விமான சேவை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Singapore Airlines Official Facebook Page

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கான (Vaccinated Travel Lanes) ‘VTL’ விமான சேவையானது மேலும் சில நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் இடையே ‘VTL’ விமான சேவை வரும் பிப்ரவரி 25- ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல், சிங்கப்பூரில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு வரும் மார்ச் 4- ஆம் தேதியும், சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு வரும் பிப்ரவரி 24- ஆம் தேதியும், சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக், புகேட் (Phuket) ஆகிய நகரங்களுக்கு இரு மார்க்கத்திலும் வரும் மார்ச் 4- ஆம் தேதியும் ‘VTL’ விமான சேவை தொடங்கப்படும். மேலும், சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் ‘VTL’ விமான சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மார்ச் 4 முதல் சிங்கப்பூரில் இருந்து பாலிக்கு விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

இது தொடர்பான பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://www.singaporeair.com/en_UK/in/home என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் காவல்துறை – தகவல் தெரிந்தால் கூறலாம்!

அரசின் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பயணிகள் அனைவரும் பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.