‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

கொரோனா தடுப்பூசியை முழுமையாக, அதாவது தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் மூலம் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான விமான சேவை, கடந்த நவம்பர் 29- ஆம் தேதி அன்று தொடங்கியது. அத்துடன், இந்தியா, சிங்கப்பூர் இடையேயான Non- VTL விமான சேவையும் தொடங்கியது.

சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!

இதையடுத்து, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்தியா, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்கி வருகின்றன. குறிப்பாக, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிறுவனங்கள் திருச்சி- சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையையும் வழங்கி வருகின்றன.

‘VTL’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் Vaccinated Travel Pass- க்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

நீண்ட மற்றும் குறுகிய பயண அனுமதி வைத்திருப்பவர்கள் Vaccinated Travel Pass- க்கு விண்ணப்பித்து, அதனை பெற்றுக் கொண்டுதான் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். பயணம் மேற்கொள்வதற்கு ஒரு வாரம் முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, Vaccinated Travel Pass கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.

சிங்கப்பூர் பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் இனி ஐந்து மணிநேரம் காத்திருப்பு கட்டாயம் !

‘VTL’ சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ‘Vaccinated Travel Pass’ தேவையில்லை. எனினும், அந்த குழந்தை தனியாக பயணம் மேற்கொள்ள அனுமதி கிடையாது. ‘Vaccinated Travel Pass’ பெற்ற பயணியுடன் தான் குழந்தை பயணிக்க முடியும்.

பயணிகள் சிங்கப்பூருக்கு பயணிப்பதற்கான காரணங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லை. Vaccinated Travel Pass- க்கு விண்ணப்பிப்பது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://safetravel.ica.gov.sg/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, தங்கள் உடல் நலம் (Health) மற்றும் பயணம் தொடர்பான ஒப்புகையை https://eservices.ica.gov.sg/sgarrivalcard/?fbclid=IwAR1iwE0hpklaeSqSVFKJFXKHKjra-7N1dq7I432-QdsRCLxkxAzWKyjA0hQ என்ற இணையதள பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் வரும் பயணிகள் செல்லத்தக்க விசா வைத்திருத்தல் வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தின் இரண்டு தவணையையும் செலுத்தியவர்கள் மட்டுமே சிங்கப்பூருக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

தடுப்பூசி சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, தடுப்பூசியின் இரண்டு டோஸ் போடப்பட்ட நாட்கள், QR Code உள்ளிட்ட விவரங்கள் ஆங்கிலத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழை சுகாதார ஒப்புகையோடு சிங்கப்பூர் வருகை அட்டை விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்திருக்க வேண்டும். இவர்கள் தங்கள் மீள் வருகை அனுமதியை உறுதி செய்திருத்தல் வேண்டும்.

பயணிகள் பயணிப்பதற்கு முன்னர், பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு உட்பட்ட கொரோனா இல்லை என்ற சான்றிதழை பயணத்தின் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண். மாதிரி எடுக்கப்பட்ட நேரம், பரிசோதனை முடிவு அறிவித்த நேரம், QR Code, பரிசோதனை நிலையத்தின் பெயர் போன்றவை ஆங்கிலத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டணத்தை இணைய தளம் வழியாக பயணிகள் செலுத்த வேண்டும்.

பயணிகள் தங்கள் தொலைபேசியில் ‘TraceTogether’ பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும், சிங்கப்பூர் வந்ததும் பயணிகள் கட்டாயம் மூன்று வாரங்கள் இந்த செயலியைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் மேலும் 1,324 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

கொரோனா பரிசோதனையானது ART அல்லது RTPCR ஆக இருக்கலாம்.

தற்போது ‘ஓமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டால் இன்று (02/12/2021) முதல் சிறப்பு பயணத் திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, பயணிகளுக்கு விமான நிலையத்தில் எடுக்கப்படும் பரிசோதனை உடன், மூன்றாவது நாள் மற்றும் ஏழாவது நாளில் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.